சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

மூன்றாம் ஆயிரம்   பூதத்தாழ்வார்  
இரண்டாம் திருவந்தாதி  

Songs from 2182.0 to 2281.0   ( மாமல்லபுரம் )
Pages:    Previous   1  2  3  4    5  6  Next
ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று



[2241.0]
நின்றது ஓர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனே! உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு



[2242.0]
பேறு ஒன்றும் முன் அறியேன் பெற்று அறியேன் பேதைமையால்
மாறு என்று சொல்லி வணங்கினேன் ஏறின்
பெருத்தெருத்தம் கோடு ஒசிய பெண் நசையின் பின் போய்
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு



[2243.0]
ஏறு ஏழும் வென்று அடர்த்த எந்தை எரி உருவத்து
ஏறு ஏறி பட்ட இடுசாபம் பாறு ஏறி
உண்ட தலை வாய் நிறைய கோட்டு அம் கை ஒண் குருதி
கண்ட பொருள் சொல்லின் கதை



[2244.0]
கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதயம் இருந்தவையே ஏத்தில் கதையின்
திருமொழியாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி



[2245.0]
Back to Top
பணிந்தேன் திருமேனி பைங் கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடிமேல் அன்பாய் துணிந்தேன்
புரிந்து ஏத்தி உன்னை புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது



[2246.0]
இது கண்டாய் நல் நெஞ்சே இப் பிறவி ஆவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது இது கண்டாய்
நாரணன் பேர் ஓதி நரகத்து அருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்



[2247.0]
கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்து பின்னும்
மறு நோய் செறுவான் வலி



[2248.0]
வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலி மிக்க வாள் வரை மத்து ஆக வலி மிக்க
வாள் நாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான்
கோள் நாகம் கொம்பு ஒசித்த கோ



[2249.0]
கோ ஆகி மா நிலம் காத்து நம் கண் முகப்பே
மா ஏகிச் செல்கின்ற மன்னவரும் பூ மேவும்
செங் கமல நாபியான் சேவடிக்கே ஏழ் பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர்



[2250.0]
Back to Top
தமர் உள்ளம் தஞ்சை தலை அரங்கம் தண்கால்
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை தமர் உள்ளும்
மாமல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏ வல்ல எந்தைக்கு இடம்



[2251.0]
இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி விடம் காலும்
தீ வாய் அரவு அணைமேல் தோன்றல் திசை அளப்பான்
பூ ஆர் அடி நிமிர்த்த போது



[2252.0]
போது அறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போது அரிந்துகொண்டு ஏத்தும் போது உள்ளம் போதும்
மணி வேங்கடவன் மலர் அடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேர் ஆய்ந்து



[2253.0]
ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் ஏய்ந்த
பிறைக் கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்படத் துணிந்த யான்



[2254.0]
யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம் பெருமான் யானே
இருந் தமிழ் நல் மாலை இணை அடிக்கே சொன்னேன்
பெருந் தமிழன் நல்லேன் பெருகு



[2255.0]
Back to Top
பெருகு மத வேழம் மாப் பிடிக்கு முன் நின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி அருகு இருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை



[2256.0]
வரைச் சந்தனக் குழம்பும் வான் கலனும் பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் நிரைத்துக்கொண்டு
ஆதிக்கண் நின்ற அறிவன் அடி இணையே
ஓதிப் பணிவது உறும்



[2257.0]
உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்து அவன் பேர் ஈர் ஐஞ்ஞூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்



[2258.0]
தவம் செய்து நான் முகனே பெற்றான் தரணி
நிவந்து அளப்ப நீட்டிய பொற் பாதம் சிவந்த தன்
கை அனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்து அனைத்துப் பேர் மொழிந்து பின்



[2259.0]
பின் நின்று தாய் இரப்ப கேளான் பெரும் பணைத் தோள்
முன் நின்று தான் இரப்பாள் மொய்ம் மலராள் சொல் நின்ற
தோள் நலத்தான் நேர் இல்லாத் தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அத்தனைக்கும் நேர்



[2260.0]
Back to Top


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Thu, 09 May 2024 20:23:06 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham song